சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை சாலையில் நேற்று தீப்பற்றி எரிந்த மாநகரப் பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் M/s. Torrent Gas Pvt Ltd நிறுவனம் மூலம் பதிவு எண் TN-01AN-1569 (ADC800) கொண்ட பேருந்து அங்கீகரிக்கப்பட்ட M/s. Chennai Auto Gas மையம் மூலமாக CNG (Retrofitment kit Conversion) மாற்றம் செய்யப்பட்டு கடந்த 28ம் தேதி முதல் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (02.07.2024) மதியம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கி சென்று கொண்டு இருந்தபோது, மதியம் சுமார் 2.00 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்தவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டது.

காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது