மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 29 புள்ளிகள் குறைந்து 66,356 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறைந்தும் உயர்ந்தும் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 29 புள்ளிகள் குறைந்து 66,356 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8 புள்ளிகள் உயர்ந்து 19,681 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு 4%, ஐ.டி.சி. பங்கு 1.8%, எல்&டி பங்கு 1.6% விலை குறைந்து விற்பனையாயின.

எஸ்.பி.ஐ., இண்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி பங்குகள் 1%, விப்ரோ, ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் 0.9% விலை குறைந்து வர்த்தகமானது. ஜே.எஸ். டபுள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் பங்குகள் 3%, என்டிபிசி பங்கு 2.4%, அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு 2% விலை உயர்ந்தன. இதேபோல் டைட்டன் பங்கு 1.7%, டாடா மோட்டார்ஸ் பங்கு 1.6%, பவர் கிரிட் பங்கு 1.5%, எம்&எம், எச்.டி.எஃப்.சி. பங்குகள் 1% விலை உயர்ந்தன.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி