டெல்லி: மும்பை-சென்னை விரைவு ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 'மும்பை -கொச்சி விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். பரங்கிப்பேட்டையில் 4 முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பரங்கிப்பேட்டையில் 23 ரயில் பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நடைமேடையை நீட்டித்து தரம் உயர்த்த வேண்டும். திருச்செந்தூர் விரைவு ரயில் பூதலூரில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்" எனவும் மக்களவையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
Advertisement