மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்

திருமலை: மும்பையை சேர்ந்த நடிகை காதம்பரி ஜேத்வானி தொழிலதிபர் ஒருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் புகார் அளித்தார். இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க ஆந்திராவில் அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவுடன் ஜேத்வானி மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வித்யாசாகர் மூலம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் பெற்று அந்த வழக்கில் மும்பை சென்ற போலீசார் நடிகை ஜேத்வானி மற்றும் அவரது பெற்றோருடன் கைது செய்து அழைத்து வரப்பட்டு தனி விடுதியில் தங்க வைத்து மும்பை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி வந்துள்ளனர். அப்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நடிகையுடன் பல பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

ஆனால் அப்போது ஜேத்வானிக்கு எதிராக அரசும் ஆதரவாக இருந்ததால் தனது தரப்பு நியாயத்தை கூறமுடியாமல் இறுதியாக வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதி அளித்த பின்னர் ஆந்திர போலீசாரே வழக்கறிஞர் மூலம் ஜாமீன் பெற்று நடிகையை மும்பைக்கு அழைத்து சென்று வாபஸ் பெற வைத்தனர். இதனைதடுத்து அந்த தொழிலதிபர் மீதான வழக்கு கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு அரசு பொறுப்பு ஏற்றதும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து நடிகை ஜேத்வானி விஜயவாடா காவல் ஆணையர் ராஜசேகர பாபுவிடம் நேரில் வந்து வழக்கறிஞர் மூலம் கடந்த ஆட்சியில் தனக்கு எதிராக நடந்த சூழ்ச்சிகளையும் இதற்கு துணையாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்தார்.

தொடர் விசாரணையில் அப்போது நடிகை கைது செய்யப்பட்டபோது விஜயவாடா டிசிபியாக இருந்த விஷால் குன்னி, இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக விசாரிக்காமல் நடிகை ஜத்வானியை கைது செய்துள்ளார். உளவுத்துறை டி.ஜி.பி சீதாராமஞ்சனேயுலு, விஜயவாடா காவல் ஆணையர் கிராந்தி ராணா டாடாவின் ஆகியோரின் வாய்மொழி உத்தரவின் பேரில் நடிகையை துணை கமிஷனர் விஷால் குன்னி கைது செய்தது தெரியவந்தது. விசாரணை அதிகாரி ஸ்ரவந்தி ராயின் அறிக்கையை ஆய்வு செய்த அரசு, அதன் அடிப்படையில் ஜெகன்மோகன் அரசில் உளவுத்துறை டி.ஜி.பி பதவியில் இருந்த சீதாராமஞ்சனேயுலு, விஜயவாடா காவல் ஆணையராக இருந்த கிராந்தி ராணா டாடா, உதவி ஆணையராக இருந்த விஷால்குன்னி ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தலைமை செயலாளர் நீரப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு