மும்பை: வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.90 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்ந்து 71,999 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் அதிகரித்து 21,690 புள்ளிகளாக உள்ளது.