மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்ததும், வடமாநிலங்களில் பருவமழை குறைவாக பெய்துள்ளதும் பங்கு விலைகள் குறையக் காரணம். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிந்து 77,210 புள்ளிகளானது. வர்த்தகம் இடையே சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 77,808 புள்ளிகளை தொட்டு, பின் 676 புள்ளிகள் சரிந்து 76,802 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66 புள்ளிகள் சரிந்து 23,501 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,520க்கு விற்பனை..!!

சென்னையில் 4 பேரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பணம் பறிப்பு..!!

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்