மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்து 66,988 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்து 66,988 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. அல்ட்ராடெக் சிமென்ட் பங்கு 3%, சன் ஃபார்மா பங்கு 2%, பார்த்தி ஏர்டெல் பங்கு 1.9%, எம்&எம் பங்கு 1.8% விலை உயர்ந்தன. விப்ரோ பங்கு 1.75%, டைட்டன் பங்கு 1.6%, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ், என்.டி.பி.சி., எல்&டி பங்குகள் 1% விலை உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37 புள்ளிகள் அதிகரித்து 20,133 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை