மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. 235 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 15 புள்ளிகள் குறைந்து 84,914 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26,000 புள்ளிகளை  கடந்து புதிய உச்சம் தொட்டது. 72.5 புள்ளிகள் உயர்ந்து 26,011 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி வர்த்தக நேர முடிவில் ஒரு புள்ளி உயர்வுடன் 25,940 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

Related posts

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்திற்கு தங்க தரச்சான்று அங்கீகாரம்!!