மும்பை, விதர்பாவில் 4 தொகுதிகளை சிவசேனாவுக்குத் தர சம்மதம்: முக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புதல்

மும்பை: மராட்டியத்தில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி கோரிய தொகுதிகளை விட்டு கொடுக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து தொகுதி பங்கீட்டில் நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக எதிர்த்து போராடும் காங்கிரஸ் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ். உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சிகளின் மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி பேச்சுவார்த்தையில் சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. குறிப்பாக மும்பையின் வாந்த்ரே கிழக்கு, காட்கோபர் மேற்கு ஆகிய தொகுதிகளையும் விதர்பாவில் 2 தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தவ்தாக்ரே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாததால் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடம் சரத்பவார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதால் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பினை மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கலக்கலான லாபம் தரும் கண்வலிக்கிழங்கு!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம்

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு