பலதானிய அடை

தேவையான பொருட்கள்

சோளம்,
தினை,
வரகு,
பச்சரிசி,
துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு,
கொள்ளு,
பாசிப் பயறு,
சோயா பீன்ஸ் மற்றும் தட்டைப் பயறு – தலா 12 கிராம்
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தலா 3 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, கழுவி வெயிலில் காயவைத்து வறுத்து கரகரப்பாக அரைக்கவும். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெங்காயம், காய்கறிகள், பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலையைத் தூவி, தண்ணீர் சேர்த்து கரைத்து, ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் பொன்னிறமாக வார்த்தெடுத்து கடலைச் சட்னியுடன் பரிமாறலாம்.

Related posts

கிரில் ஃபிஷ்

பிளம் கேக் பால்ஸ்

செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா