முல்லைப் பெரியாறு உள்பட 9 புதிய அணைகள் கட்ட திட்டம்: கேரள சட்டசபையில் அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று அம்மாநில சட்டசபையில் கூறியது: முல்லைப் பெரியாறு உள்பட கேரளாவில் 9 புதிய அணைகளை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 129 வருடங்கள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தான் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்டினாலும் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும். தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பது தான் கேரள அரசின் கொள்கையாகும். புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை