முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை உயர்வு

அம்பத்தூர்: முகூர்த்த நாளையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த நாளையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று காலை அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி ரூ.350, ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.250, கனகாம்பரம் ரூ.600, அரளி ரூ.100, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.120, சாக்லேட் ரோஸ் ரூ.80, பன்னீர் ரோஸ் ரூ.70, என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘முகூர்த்த நாளையொட்டி மார்க்கெட்டில் பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்,’’ என்றார்.

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு