மண் குதிரை வெச்சு ரேசுக்கு வர்றாரு… மாஜி எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்: அண்ணாமலையை கலாய்த்த ஜெயக்குமார்

நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை எங்களோடு கூட்டணியில் இருந்தபோது கூட, தோழமை உணர்வுடன் செயல்படவில்லை. அதிமுக தலைவர்களை அவமதிக்கும் வகையில் அவர் பேசினார். இப்போது நாடாளுமன்ற தேர்தல் ரேசில் எங்கள் குதிரையும் உள்ளது என்கிறார். மண் குதிரையை வைத்து கொண்டு தேர்தல் ரேசில் அவர் பங்கேற்கிறார்.

அதிமுகவில் எப்போதோ இருந்த முன்னாள் எம்எல்ஏக்களை தேடி கண்டுபிடித்து, இப்போது கொண்டு போய் பாஜவில் சேர்க்கின்றனர். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால், ஒருபோதும் கட்சி மாறமாட்டார்கள். அண்ணாமலை இப்போது கொண்டு போய் சேர்த்திருக்கிற முன்னாள் எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கூட உரிமை கோருவார்? அந்தளவுக்கு அவர் சென்று விட்டார். ஓபிஎஸ் பாஜவின் அடிமையாக மாறிவிட்டார். சின்னத்தை முடக்குவோம் என பிதற்றி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு