எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்: அத்வானிக்கு நேரில் தர முடிவு

புதுடெல்லி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் உட்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்தியாவில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமி நாதன், மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் மறைந்த கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜ மூத்த தலைவர் அத்வானி ஆகிய 5 பேருக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ், சரண் சிங் சார்பில் அவரது பேரன் ஜெயந்த் சவுத்ரி, எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் நித்யா ராவ் மற்றும் கர்பூரி தாக்கூர் சார்பில் அவரது மகன் ராம்நாத் தாக்கூர் ஆகியோர் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர். வயது மூப்பு காரணமாக அத்வானியால் ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று நேரில் வரமுடியவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு நேராக சென்று விருது வழங்கப்பட உள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு