ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

திருவனந்தபுரம்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது; கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பதுங்கி இருந்த விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் அவரது உறவினர் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள் திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பதிலடி

மீனவர்கள் ஸ்டிரைக்

ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி