எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் 24 நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் எம்பிக்கள் யார்?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவையில் 16 நாடாளுமன்ற நிலை குழுக்களும், மாநிலங்களவையில் 8 நாடாளுமன்ற நிலை குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்கள் நியமிக்கப்படுவர். பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் துறை சார்ந்த நிலைக்குழுவின் தலைவர்கள் பதவிக்கு ஆளுங்கட்சியில் 13 பேரும், எதிர்க்கட்சியில் 11 பேரும் இடம் பெறுவார்கள். மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் முடிவின்படி, நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நிலைக்குழு தலைவர் பதவியை பிடிப்பதில் ஆளுங்கட்சி – எதிர்கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

காரணம் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ெபரும்பான்மை பலத்தை பெறாததால் கூட்டணி ஆட்சியை மூன்றாவது முறையாக அமைத்துள்ளது. அதே நேரம் எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 236 ஆக உள்ளதால், நிலைக்குழுக்களில் எதிர்கட்சி எம்பிக்களின் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இடம்பெறுவோரின் விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள், மொத்தமுள்ள 24 நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு தேர்வு செய்யப்படும் எம்பிக்களின் பெயர் பரிந்துரை விபரங்களை அனுப்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுக் கணக்குக் குழு, நாடாளுமன்றத்தின் தணிக்கைக் குழுவில் இடம்பெற வாய்ப்புள்ளது. சமாஜ்வாதி கட்சி (இரு அவைகளிலும் 41 எம்பிக்கள்), திரிணாமுல் காங்கிரஸ் (இரு அவைகளிலும் 42 எம்பிக்கள்) கட்சிகள் தலா ஒரு நிலைக்குழு தலைவர் பதவியை பெறவாய்ப்புள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி தொடங்குவதற்கு முன்னர் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும் உறுப்பினர்களின் விபரங்களை இரு அவைகளின் செயலகங்கள் கேட்டுள்ளதால், அதற்கான பட்டியலை தயாரிக்கும் பணியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

 

Related posts

சென்னை வளசரவாக்கத்தில் உரிய சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் கைது

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடர்: உயிரிழப்பு எண்ணிக்கை 238 ஆக அதிகரிப்பு.! மீட்பு பணிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைப்பு

வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு