வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்

நன்றி குங்குமம் தோழி

* வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

* அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

* எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

* குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. காலை எழுந்தவுடன் காபியை தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதுடன் அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

* அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்த்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

* கொத்தமல்லிக் கீரையை வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

* காலை, மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

– இந்திராணி தங்கவேல், சென்னை.

அதிமதுரம் அற்புதங்கள்

* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து இரவு படுக்கும்போது பாலில் கலந்து அருந்தி வர மலச்சிக்கல் இருக்காது.

* அதிமதுர சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிட ஆண்மை குறை தீரும்.

* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றும் சம அளவு எடுத்து பொடித்து 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட இருமல் தீரும்.

* அதிமதுரம், சீரகம் இரண்டும் சம அளவு எடுத்து பொடித்து 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மில்லியாக சுண்டியபின் குடித்தால் பிரசவத்துக்கு முந்தைய ரத்தப்போக்கு நிற்கும்.

– கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!