மானாமதுரை ரயில்வேகேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

*ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மானாமதுரை : மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்டு நான்கு வழிச்சாலையை இணைக்கும் ரயில்வேகேட் ரோடு லெவல் கிராசிங் பகுதியில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்டையும் நான்கு வழிச்சாலையை இணைக்கும் ரயில்வே கேட் ரோடு கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே துறையினரால் தண்டவாளங்கள் சீரமைப்பதற்காக தண்டவாளத்திற்கும் ரயில்வே லெவல் கிராசிங்கிற்கும் இடையே உள்ள ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு பழைய தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டது.

இந்த லெவல் கிராசிங் கேட் வழியாக பழைய பஸ் ஸ்டாண்டு, வெள்ளையன்தோப்பு, ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே காலனி, பர்மா காலனி, சோமசுந்தரம் காலனி, சீயோன் நகர், ஆதனூர், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தண்டவாளம் சீரமைப்பிற்காக தோண்டப்பட்ட ஜல்லிகற்கள் அப்படியே ேபாடப்பட்டுள்ளதால் நடந்து செல்லும் பார்வைக்குறைபாடுடைய முதியோர்கள், சிறுவர்கள், சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் சிக்கி கீழே விழுகின்றனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று ரயில்வே துறையினரை ெபாதுமக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்