தாய் உள்ளம் கொண்ட இசையமைப்பாளர் ஆதரவற்ற துணை நடிகருக்கு கொள்ளி வைத்தார் இமான்: தன் கைகளாலே இறுதிச்சடங்கு செய்தார்

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்த இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் அவ்வப்போது பொருளாதார உதவிகள் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிரபு சிகிச்சை பலனின்றி காலாமானார். உறவினர்கள் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த அவரது உடலுக்கு இசையமைப்பாளர் இமான் நேரில் சென்று இறுதிச் சடங்குகளை செய்தார். மேலும் அவரது உடல் தகனத்தின்போது தன் கையால் கொள்ளி வைத்தார். இந்த வீடியோ வைரலானதால் இமானின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு