மாமியாரை கொலை செய்ய ரூ.15 லட்சம் கொடுத்த மருமகள்

புதுச்சேரி: ரூ.15 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமியாரை கொல்ல முயன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, உருளையன்பேட்டை, அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் மேரிடெய்சி (73). கடந்த 12ம் தேதி மேரி டெய்சி வீட்டில் புகுந்த 3 மர்ம நபர்கள், தலையணையால் அமுக்கி கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், டெய்சி மகன் அந்தோணி சேவியரின் இரண்டாவது மனைவி ரெபேக்காவுடன் (40) சொத்து பிரச்னை இருந்தது தெரியவந்தது. ஊட்டி குன்னூரில் இருந்த ரெபேக்கவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது செல்போனை பறிமுதல் செய்து, அவர் யாருடன் பேசியிருக்கிறார் என ஆய்வு செய்தனர்.

அப்போது, தனது கணவர் அந்தோணி சேவியர் பெயரில் இருக்கும் சொத்துகளை அடையவும், மறுமணம் செய்ய இடையூறாக இருந்ததாலும் மாமியார் மேரிடெய்சியை கொலை செய்ய தனது நாய் பண்ணையில் வேலை செய்து வந்த பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் ராஜேஷ் (27) மற்றும் கூட்டாளிகளான முத்து (19), சிம்சன் (19) மற்றொரு சிறுவன் ஆகியோரிம் ரூ.15 லட்சம் தருவதாக பேரம் பேசிய ஆடியோ சிக்கியது.
இதையடுத்து கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்