தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

புதுடெல்லி: தாய்க்காக மரக்கன்று நட வேண்டும் என்று வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் முதல் நாட்டு மக்களிடம் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 25ம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதால், நாட்டின் பிரதமராக 3வது முறை மோடி பதவியேற்றார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மோடியின் 111வது மன்கிபாத் வானொலி உரை ஒலிபரப்பப்பட்டது.

இன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ‘உலக யோகா தினத்தில் ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். காஷ்மீரில் இளைஞர்கள், சகோதரிகள், மகள்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குவைத் அரசு தனது தேசிய வானொலியில் இந்திய கலாசாரத்தின் பல்வேறு தகவல்களை ஒலிபரப்புகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது வீரர்களின் ஆட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றுள்ளது. கேரள கலாசாரத்தில் குடைகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஏழை, பணக்காரன், வேலை செய்யும் பெண்கள் என்று யாராக இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் தாய்க்காக மரக்கன்றுகளை நடவுசெய்ய வேண்டும். உலகளவில் இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. உலக புகழ்பெற்ற 24 கவிஞர்களின் சிலைகளை துர்க்மெனிஸ்தான் அதிபர் திறந்து வைத்தார். இந்த சிலைகளில் நமது ரவீந்திரநாத் தாகூர் சிலையும் அடங்கும். மக்களவைத் தேர்தல் மூலம் இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது