2 வயது மகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

மதுரை: மதுரை, கோச்சடை, பிஎஸ்எம் நகரைச் சேர்ந்தவர் முத்து கார்த்திக் (32). பால் வியாபாரி. இவர் கடந்த 2020ம் ஆண்டு முருகபூபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு முத்துமீனா (2) என்ற மகள் உள்ளார். முருகபூபதி 15 வயதில் இருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். குழந்தை பிறந்த பின் நீரிழிவு நோய் பாதிப்பளவு உயர்ந்து நாள்தோறும் காலையும், மாலையும் இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முத்துகார்த்திக், பால் விநியோகம் செய்வதற்காக சென்றார். அப்போது வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த முருகபூபதி, ஏற்கனவே ஆன்லைனில் வாங்கி வைத்திருந்த கெமிக்கல் பாட்டில்களில் இருந்த கெமிக்கலை, குழந்தை முத்துமீனாவின் வாயில் ஊற்றி தீ வைத்ததுடன், தன் மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது 2 பேரும் அலறி துடித்தனர். இந்த சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். அதில், முத்துமீனா சம்பவ இடத்திலேயே பலியானார். 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முருகபூபதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார். எஸ்எஸ் காலனி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணை குறித்து, போலீசார் கூறும்போது, ‘‘நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முருகபூபதி, கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் குழந்தையை வளர்ப்பதில், எதிர்காலத்தில் சிரமம் ஏற்படக்கூடும் என கருதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தங்களின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனக்கூறி, கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார்’என்றார்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்