மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 2,862 ஆக அதிகரிப்பு…2,562 பேர் காயம்!!

ரபாத்: மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,862க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், தலைநகர் ரபாத், காசா பிளாங்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுந்தன. நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், இடிபாடுகளில் சிக்கிய மக்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,862-ஐ தாண்டியது. 2,562 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் வெளியாகவில்லை. மொராக்கோவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் 4வது நாளாக தொடர்கிறது. கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னையால் மொராக்கோவுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, மனிதாபிமான அடிப்படையில் தற்போது தனது வான்வெளியை பயன்படுத்த மொராக்கோவுக்கு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், எகிப்து, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

Related posts

2024-ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

இயற்கை எப்போதும் நம்மைக் கைவிடாது…

உயர் வருமானம் தரும் உலர் மலர்கள்!