கோபியில் அதிகாலையில் பூட்டிய வீடுகளை குறி வைத்து நடமாடும் மர்ம நபர்-மக்கள் பீதி

*வீடியோ வைரல்

கோபி : ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட பகுதியான கமலா ரைஸ் மில் வீதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு சிறிய வீதியில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் சட்டை அணியாமல் வெறும் டவுசருடன் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டவாறு, பூட்டி உள்ள வீடுகளை கண்காணித்து செல்வது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஏற்கனவே இதேபோல 2 முறை மர்ம நபர் நடமாட்டம் இருந்ததாகவும், தற்போது 3வது முறையாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதாகவும் தகவல் பரவியது.

கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர்கள் மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி கேமரா பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அருகில் உள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறி வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் காரணமாக கமலா ரைஸ் மில் வீதி, மேட்டுவலுவு, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவில் உள்ள நபர் குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை