இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை கூடுதலாக உள்ளது: வங்கதேச கேப்டன் பேட்டி

சென்னை; வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வங்கதேச அணியினர் நேற்று மாலை சென்னை வந்தடைந்தனர். இவர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியை தொடங்கினர். முன்னதாக இந்தியா புறப்படும் முன் டாக்கா விமான நிலையத்தில் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டே அளித்த பேட்டி: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கண்டிப்பாக எங்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நாட்டின் மக்களிடமும் கூடுதல் நம்பிக்கை உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டிலும் வெற்றிபெறும் நோக்கில் விளையாடுவோம். டெஸ்ட்டில் 5 நாட்களும் நன்றாக விளையாட என்ன திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்பது முக்கியம். எங்கள் பலம் மற்றும் எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது என்பதில் கவனம் செலுத்துவோம். அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட குறிக்கோள், பேட்டிங்கில் என்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பேன். மீதமுள்ளவை அல்லாவின் கையில் உள்ளது, என்றார்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை