ஃபிளை மீ டு த மூன்!

அமெரிக்க நாசா விண்வெளி மையமாகவே இருந்தாலும் அங்கும் ஆண்-பெண் பேதம் இருக்கத்தான் செய்யும். அதை எப்படி ஸ்டைலாகவும், எளிமையாகவும் கையாளமுடியும் என வகுப்பெடுக்கிறது சமீபத்தில் வெளியான ‘ஃபிளை மீ டு த மூன்’ ஹாலிவுட் படம். 1969ம் ஆண்டு ‘அப்போலோ 11′ மிஷனின் புதிதாக வேலைக்குச் சேரும் மார்கெட்டிங் நிபுணர் கெல்லி ஜோன்ஸ், அவருடன் மிஷன் லான்ச் இயக்குநர் கோல். சாதிக்கத் துடிக்கும் இளம் பெண் கெல்லி. ஏற்கனவே நடந்த மிஷனில் மூன்று விண்வெளி வீரர்கள் மரணம், மிஷன் தோல்வி என பல எதிர்மறை சவால்களைக் கொண்ட கோல், இருவரும் இணைந்து அடுத்த மிஷனை மிகச் சரியாக கொடுத்தே தீர வேண்டும் என்கிற நெருக்கடியுடன் செயல்படுகிறார்கள். இவ்விருவருக்கும் இடையே நிகழும் கருத்து மோதல்கள், ஆண் பெண் சமநிலை பிரச்னைகள் என செல்லும் கதை. இடையே அமெரிக்காவின் நாசா விண்வெளியின் முந்தைய லான்ச்சில் உயிரிழப்பு, தோல்வி என பொதுமக்களுக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.

ஒரு பக்கம் ரஷ்யாவுடனான போட்டிகள் என அமெரிக்கா நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயம். இந்த சிக்கலான சூழலில் சேரும் கெல்லி ஜோன்ஸ்க்கு மனரீதியாகவும், வேலை ரீதியாகவும் பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இடையிலே கோல்ஸின் ஆண் அதிகாரி என்னும் தோரணை.ஆனால் ஒரு கட்டத்தில் கெல்லியின் புத்தி சாதுர்யம் கோல்ஸை விரும்பும் அளவுக்கு மாற்றி விடுகிறது. ‘அப்போலோ 11′ லான்ச்க்கு முன்பான போலிப் பயிற்சிகள் மற்றும் அதனை படமாக்கும் நிகழ்வுகள் என கதைக்களம் நம்மை 1969க்கே கொண்டு செல்கிறது. இவ்விருவரும் இணைந்து மிஷனை வெற்றிகரமாக நிகழ்த்துவதே மீதிக் கதை. கெல்லி ஜோன்ஸாக பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். ஏற்கனவே பல படங்களின் தன் நடிப்பால் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற நடிகை. இதெல்லாம் அசால்ட் என பல காட்சிகளில் பணியிடத்தின் நெருக்கடிகளையும் அதனை எப்படி சாதுர்யமாக தட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்பதை மிக ஸ்டைலாக காட்டி மனதில் இடம் பிடிக்கிறார். காதல், காமெடி, ஆண்-பெண் சமநிலை என அனைத்தையும் பீரியாடிக் பாடமாகக் கொடுத்திருக்கிறார் கிரெக் பெர்லன்டி.
– மகளிர் மலர் குழு

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு