நிலவில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக உள்ளது: இஸ்ரோ தகவல்

டெல்லி: கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

தற்போது, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிவித்துள்ளது. ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளது, நிலவில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக உள்ளது இப்போது, ரோவர் மூலம் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, நிலவின் தென் துருவத்தில் உள்ள ரகசியங்களைத் தேடி சந்திரயான்-3 பிரக்யான் ரோவர் நகரும் புதிய வீடியோவை வெளியிட்டிருந்தது.

 

Related posts

நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்