மணி ஹெய்ஸ்ட் பாணியில் பணத்தை பறக்க விட்ட நபர்: ராஜஸ்தானில் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ஸ்பானிஷ் மொழியில் உருவாக்கப்பட்டது ‘மணி ஹெய்ஸ்ட்’ எனும் வெப்சீரிஸ். புதுப்புது டெக்னிக்குகளுடன் வங்கியை கொள்ளை அடிக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் கொண்ட இந்த சீரிசில் போலீசில் இருந்து தப்பிக்க கொள்ளையர்கள் பணத்தில் சிறிதளவை நடுரோட்டில் பறக்கவிடுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. அங்குள்ள மால்வியா நகரில் கவுரவ் டவர் எனும் பிரபல ஷாப்பிங் மால் எதிரே கார் மீது ஒருவர் மணி ஹெய்ஸ்ட் கொள்ளையர்கள் போலவே சிவப்பு நிற ஜம்ப்ஷூட், சால்வடார் டாலி மாஸ்க் அணிந்து 20 ரூபாய் நோட்டுகளை சூறை விட்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் பணத்தை எடுக்க குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதுதொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை வீசி எறிந்த நபரை கைது செய்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது