காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் தங்கள் இடத்தை உறுதி செய்வர். மற்றொரு பேட்ஸ்மேன் இடத்திற்கு திலக்வர்மா -ருதுராஜ் கெய்க்வாட் இடையே போட்டி உள்ளது. ஜடேஜாவுடன், சுழலில் அஸ்வின் வலு சேர்ப்பார். ஒன்றரை ஆண்டுக்கு பின் அஸ்வின் ஒருநாள் போட்டியில் ஆட உள்ளார். நம்பர் ஒன் பவுலரான சிராஜ்க்கு நாளை ஓய்வு அளிக்கப்படலாம். இதனால் பும்ரா, ஷமியுடன் பிரசித்கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம் ஆஸ்திரேலியா தனது முழு பலத்துடன் களம் இறங்குகிறது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தொடக்க வீரராக ஆடுவர். ஸ்டீவன் ஸ்மித், லாபுசாக்னே , மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி என அதிரடி பேட்ஸ்மேன் பட்டியல் நீள்கிறது.
பவுலிங்கில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் சுழலில் ஆடம் ஜம்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். உலக கோப்பைக்கு முன் இந்த தொடர் இரு அணிக்கும் நல்ல பயிற்சி களமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தொடரை இந்தியா கைப்பற்றினால் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் மதல் இடத்திற்கு முன்னேறலாம். பகலிரவு போட்டியாக நடைபெறும். இந்த ஆட்டம் இந்தியநேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி`யை கலர்ஸ் தமிழ், ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஆப்பிலும் பார்க்கலாம்.