மோடி அரசு 7.5 லட்சம் கோடி ஊழல் செய்யவில்லையாம்… முட்டு கொடுக்கும் எடப்பாடி

ஓமலூர்: அதிமுக மாநாடு குறித்து ஓபிஎஸ் விமர்சனம் செய்தது பற்றிய கேள்விக்கு அவர் விரக்தியில் பேசுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலத்தை அடுத்துள்ள ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பேசினார். பின்னர் அவர் பேட்டி: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டை பார்த்து ஓபிஎஸ் விரக்தியில் பேசுகிறார். ஒன்றிய அரசில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடப்பது தான். இது ஊழல் அல்ல. கனகராஜ் என்றைக்காவது ஜெயலலிதாவுக்கு‌ வாகனத்தை ஓட்டி உள்ளாரா? பொதுக்கூட்டங்கள், விழா மேடைகள் போன்றவற்றுக்கு அவர் சென்ற போது, கனகராஜ் அவருக்கு கார் ஓட்டியது போல ஏதாவது செய்தி வந்துள்ளதா?. ஓபிஎஸ் முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி