அயோத்தி ராமர் சிலையை மோடி பிரதிஷ்டை செய்வார் நான் சென்று கைதட்டுவதா? புரி சங்கராச்சாரியார் பேச்சால் பரபரப்பு

புரி; அயோத்தி ராமர் கோயில் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும் போது நான் அங்கு சென்று கைதட்ட வேண்டுமா என்று புரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ம் தேதி நடக்கிறது. அன்று ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்த விழாவுக்காக நாடு முழுவதும் இருந்து முக்கிய விஐபிக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய சாமியார்களை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புரி மடத்தின் சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதிக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தொடர்பாக நேற்று புரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதி கூறும்போது,’ அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலையை பிரதமர் மோடி தொட்டு அதனை பிரதிஷ்டை செய்வார். நான் அங்கு போய் கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா?. நான் அயோத்திக்கு செல்லப்போவதில்லை’ என்று தெரிவித்தார். அவரது பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு