யாருக்குனாலும் ஓட்டு போடுங்க… ஆனா மோடிக்கு மட்டும் போடாதீங்க… அய்யாக்கண்ணு ‘பரபர’

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில் விழுப்புரம் ஆட்சியரிடம் பிரதமர் கிசான் நிதியுதவி திட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் நிதி உதவி வழங்கக்கோரி மனு அளித்தனர். தொடர்ந்த அவர் கூறுகையில், ‘தேர்தல் வந்தால் மட்டும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முடிந்தவுடன் எங்களை அடிமைபோல் நடத்துகிறார்கள். பிரதமர் மோடி எல்லா விவசாயிகளுக்கும் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த தொகையே குறைவு. ஆனால் அறிவித்த தொகையும் விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசுகிறார்கள். இதில் ஒரு விவசாயி இறந்துள்ளார். சர்வாதிகார நாடுகளைபோல் விவசாயிகளை ஒன்றிய மோடி அரசு நடத்துகிறது. இந்த தேர்தலில் மிஷினில் கோளாறு செய்து, பணம் கொடுத்து ஓட்டுவாங்கலாம் என்று பிரதமர் மோடி நினைத்து கொண்டிருக்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், மோடிக்கு மட்டும் ஓட்டுபோடாதீர்கள் என்று நாடு முழுவதும் அந்தந்த மாநில விவசாய சங்கங்களை திரட்டி பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 20சதவீத விவசாயிகள் மோடிக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்,’என்றார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!