தமிழ்நாட்டில் மோடி நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான் திட்டவட்டம்

தூத்துக்குடி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மோடி களமிறங்கினால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளனர். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்ப் பதவியை அப்துல் கலாமிற்கு கொடுத்தனர். இந்நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை மட்டுமே. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அப்போதுதான் என்னை நீங்கள் நம்புவீர்கள்’’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு