பத்தாண்டு மோடி ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்து விட்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்த ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை. வந்தே பாரத் என்பது ஒரு மோசடி. ஒருமணி நேரம் மிச்சமாகும் பயணத்திற்கு 20 சதவிகிதம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலைக்கு ரயில் வசதி இல்லை. தமிழகத்தை வஞ்சிக்கிற நோக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்காமலும், நிதி ஒதுக்காமலும் வெளிநாடுகளில் கடன் பெற முடியாமல் முட்டுக்கட்டைகளை மோடி அரசு போட்டு வருகிறது.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.

அதற்கேற்ப ரயில் பாதைகளை மேம்படுத்த வேண்டும். கடந்த பாஜ ஆட்சியில் ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைப் போல இப்போதும் புறக்கணிக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது. ரயில் பெட்டிகளில் கழிவறை உள்ளிட்ட வசதிகளை பெருக்கி பொது மக்கள் பயணிக்கிற வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்களை எடுக்கவில்லை என்றுச் சொன்னால் மக்களின் கோபத்திற்கு மோடி அரசு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தனக்கு மிரட்டல் இருக்கிறது, போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என கோரி அரசுக்கு செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, 24 மணி நேரமும் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க அனுமதித்துள்ளது. இதை தொடர்ந்து செல்வப்பெருந்தகைக்கு துப்பாக்கி ஏந்திய 3 போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது