மோடியை நேருவுடன் ஒப்பிட முடியாது: பாஜ எம்.பி. பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவையில் இந்த தீர்மானத்தை பாஜ உறுப்பினர் சுதன்ஷூ திரிவேதி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, “மறைந்த பிரதமர் நேருவுடன் மோடியை ஒப்பிட முடியாது என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். நானும் அதை ஏற்று கொள்கிறேன். நேரு ஒரு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். மோடி எளிமையான குடும்பத்தில் பிறந்து வந்தவர். நேரு அவரது ஆட்சியை விமர்சித்தவர்களை சிறையில் அடைத்தார்.

ஆனால் மோடி ஆட்சியை விமர்சிப்பவர்கள் மீது மோடிஎந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மோடி நிகரற்றவர். யாருடனும் ஒப்பிட முடியாத சாதனைகளை படைத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு எப்போதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருந்தது” என்று தெரிவித்தார். அவரது சர்ச்சை பேச்சுக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related posts

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: செங்கல்பட்டு கலெக்டர் பங்கேற்பு

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

நாகல்கேணி பகுதியில் கஞ்சா விற்ற தம்பதி கைது