சென்னை: பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டிற்கு தேவையற்றது, எல்லா கட்சிகளிலும் பல அணிகள் உள்ளது, அதேபோல CBI, ED, IT போன்ற பல அணிகள் பாஜகவில் உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் ED பார்த்தும் பயப்பட மாட்டோம், மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம், நீட்டுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.