மீனவர்களை கொன்ற போது வேடிக்கை பார்த்தவர் கச்சத்தீவை பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை: சி.வி.சண்முகம் பளார்…பளார்…

விழுப்புரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் விலைவாசி உயர்வு தாறுமாறாக உயர்ந்துள்ளது. அரிசிக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு வரப்போகிறது.

அரிசி கிலோவுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. பருப்பு, எண்ணெய், கடுகு எல்லா விலைவாசியும் உயர்ந்துவிட்டது. எல்லா கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் அதானி, அம்பானி உள்ளிட்ட 2 பேர் மட்டும்தான் நன்றாக இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் 10 ஆண்டுகளில் தாக்கப்படுகிறார்கள், தினமும் கைது செய்யப்படுகிறார்கள். அடித்து கொலை செய்யப்படுகிறார்கள்.

கடலில் படகுகளையும், வலைகளையும் அடித்து நொறுக்குகிறார்கள். அப்போதெல்லாம் இதைபற்றி தெரியாத மோடிக்கு தேர்தல் நேரத்தில் தான் கச்சத்தீவு தெரிகிறது. 10 ஆண்டு காலத்தில் கச்சத்தீவு பிரச்னைக்கு மோடி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்?. இதை பற்றி பேச மோடிக்கும், பாஜகவுக்கும் என்ன தகுதி, அருகதை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக பேசுகிறார்கள் என்றார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை