பதவியிலிருந்து சீக்கிரம் மோடியை தூக்கினால் இந்தியாவிற்கு நன்மை பயக்கும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகே.எஸ்.இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜவின் பத்தாண்டு ஆட்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் மோசமானது. பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த நீட் தேர்வு ரத்து குறித்த தனி தீர்மானம் தவறானது, ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘‘பாஜ கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியே நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்று இருக்கிறார் கள்’’ என்றார்.

Related posts

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வேர்களைத் தேடி பயணத்திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு