ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவை மபி.யில் இன்று மோடி துவக்கி வைக்கிறார்

புதுடெல்லி: மபி.யில் இன்று ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரயில்வேயை நவீனமயமாக்கும் வகையில், சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயங்க தொடங்கியுள்ளது. இதில் நவீன வசதிகள் உள்ளதால், அதிக பயணிகளை ஈர்த்து வருகிறது. அதிவேக செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், மபியின் போபாலில் உள்ள கமலாபதி திரிபாதி ரயில் நிலையத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார். போபால் – இந்தூர்,போபால் -ஜபல்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், ராஞ்சி-பாட்னா, கோவா -மும்பை,பெங்களூரு -தார்வாட் வந்தே பாரத் ரயில்களையும் துவக்கி வைக்கிறார். ஒரேநாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்