மோடி ஏமாத்திட்டாரு… கிருஷ்ணசாமி முதல்முறையாக ஓபன் டாக்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி நடுநிலையுடன் இருக்கிறது. தற்போது வரை எந்த கட்சியுடனும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நட்பு ரீதியாக சிலர் கூட்டணி குறித்து பேசினாலும், அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. வருகிற 11ம் தேதிக்கு பிறகு கூட்டணி குறித்து தெளிவு கிடைக்கும். பட்டியல் பிரிவிலிருந்து (எஸ்.சி) தேவேந்திர குல வேளாளர் சமூதாயத்தை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து நாங்களும் பாஜவுடன் கடந்த 2018, 2019 காலக்கட்டத்தில் பேசி உள்ளோம். ஆனால், இந்த கோரிக்கையை பரிசீலித்து தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு, செய்திருக்க வேண்டியவர்கள் (மோடி அரசு) செய்யவில்லை. இது எம் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. இனி பிரதமர் மோடியை கும்பலோடு கும்பலாக நின்று சந்திக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெல்வோம். பிரதமர் மோடியை தனியாகவே சந்தித்து பேசுவோம்.

தமிழ்நாட்டில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரையில் வெற்றி கூட்டணியில்தான் இடம் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமி முதல்முறையாக பாஜவை நேரடியாக விமர்சித்து இருப்பதன் மூலம் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவில் சேர இருப்பதாக தகவலல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?