மோடி, அமித் ஷாவுக்கு அடுத்தப்படியாக ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கூடுதல் பாதுகாப்பு; உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மோடி, அமித் ஷாவுக்கு அடுத்தப்படியாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு ஏற்கனவே ஒன்றிய அரசின் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையுடன் இசட்- பிளஸ் பாதுகாப்பின் கீழ், கூடுதலாக அட்வான்ஸ் செக்யூரிட்டி லைசன் (ஏஎஸ்எல்) பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் பாதுகாப்பானது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக மோகன் பகவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முக்கிய காரணம், பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு மோகன் பகவத் செல்லும் போது, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் எழுந்ததாக உளவு தகவல்கள் பகிரப்பட்டன.

மேலும் அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதையடுத்து மோகன் பகவத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையுடன் இசட்-பிளஸ் பாதுகாப்பின் கீழ், ஏஎஸ்எல் அந்தஸ்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு