மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

சண்டிகர்,: அரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சோனிபட் நகரில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
அரியானாவில் முன்பு சிறிய, நடுத்தர வணிகங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கின. ஆனால் தற்போது நாட்டில் குறிப்பாக அரியானாவில் சிறு தொழில்கள் நலிந்து விட்டதாக மக்கள் கூறுகின்றனர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசும், அரியானா மாநில அரசும் அரியானாவின் சிறு தொழில் செய்பவர்களை நாசப்படுத்தி விட்டனர்.

பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு அரசியல் சாசனத்தை தாக்கி ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், இளைஞர்களின் நலன்களை புறக்கணித்து விட்டது. அவர்களுக்கு எதையும் செய்யாத மோடி அரசு நாட்டிலுள்ள 2 கோடீஸ்வரர்கள்(அதானி – அம்பானி) பலன் பெறவே செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் அவை தனியார் மயமாக்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர்கள் மட்டுமே தெரிகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி