மக்களாட்சியை அடியோடு புதைக்க பார்க்கிறார் மோடி

*ரமேஷ் சென்னிதலா குற்றச்சாட்டு

பாலக்காடு : மக்களாட்சியை அடியோடு பிரதமர் மோடி புதைக்க பார்க்கிறார் என ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டினார்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஆலத்தூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸை அறிமுகம் செய்து வைத்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா திறந்து வைத்து பேசியதாவது:

மக்கள் ஆட்சியை அடியோடு புதைக்க பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜ கட்சியினர் ஒரு புறமும், மற்றொரு கட்சி மாநில அரசு ஆட்சியை தவறான பாதையில் கொண்டு சென்று பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சரி கட்ட மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். இவ்வாறு ரமேஷ் சென்னிதலா பேசினார்.

முன்னதாக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு தேர்தல் கமிட்டி சேர்மன் தங்கப்பன் தலைமைத் தாங்கினார். வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ், ஜோஸ் வள்ளூர், வி.எஸ்.விஜயராகவன்,கபீர் மாஸ்ட்டர், சந்திரன், பாலகோபால், ஜப்பார் மாஸ்ட்டர் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்