மோடி அரசு என்றாலே ஆணவம்தான்… விவசாயிகளுக்கு எதிரான அரசாக இருப்பதால் நம்பிக்கை இல்லை: சுப்ரியா சுலே எம்.பி. பேச்சு

டெல்லி: மோடி அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது;

மோடி அரசு என்றாலே ஆணவம்தான்: சுப்ரியா சுலே

மோடி அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மோடி அரசு எப்போதுமே நிகழ்காலத்தைப் பற்றி பேசுவது இல்லை. மாநில அரசுகளை கவிழ்த்தல், அரசியலமைப்பு நிறுவனங்களை சிதைத்தல் உள்ளிட்ட 9 சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியது மோடி அரசின் சாதனை; அதற்குத்தான் கர்நாடக தேர்தலில் பதில். அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் வெற்று பேச்சுகள் மட்டுமே உள்ளது.

மோடி ஆட்சியில் கூட்டாட்சி தத்துவம் கடும் பாதிப்பு

பல்வேறு அம்சங்களில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம் குறைந்து வருகிறது. கூட்டாட்சி தத்துவம் என்பது மோடி ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மணிப்பூர், அரியானா மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. 9 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் அதிகாரத்தை ஒன்றிய பாஜக அரசு அபகரித்துள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள்

விவசாயிகளுக்கு எதிரான அரசாக இருப்பதால் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லை. இந்தியாவில் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் பாலை கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்