மோடிக்கு கொலை மிரட்டல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் யாதகிரி அடுத்த சூர்பூர் பகுதியை சேர்ந்த முகமது ரசூல் கதாரே என்பவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து சூர்பூர் போலீசார், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 505(1)(பி), 25(1)(பி) மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். முன்னதாக தலைமறைவாக உள்ள முகமது ரசூல் கதாரேவை ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு