மோடி உடைத்த கட்சிகள்

ஒவ்வொரு மாநிலத்திலும் ஈடி, சிபிஐ, வருமானவரித்துறையை கொண்டு அத்தனை கட்சிகளையும் உடைக்கும் பணியை மோடி தலைமையிலான பா.ஜ அரசு மேற்கொண்டு வருகிறது. பீகாரிலும் உடைக்கும் படலம் தாராளம். ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு லோக் ஜனசக்தி உடைந்தது. அவரது மகன் சிராக் பஸ்வான் ஒரு அணியாகவும், ராம்விலாஸ் பஸ்வான் தம்பி பசுபதிகுமார் பராஸ் ஒரு அணியாகவும் பா.ஜவால் பிரிக்கப்பட்டனர். இவர்களில் பசுபதியை பா.ஜ அரவணைத்துக்கொண்டது. ஆனால் சிராக் பஸ்வானும் பா.ஜவை விட்டு தூரம் செல்ல விரும்பவில்லை.

2020 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ நிற்கும் தொகுதிகளை தவிர்த்து அத்தனை தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை களம் இறக்கினார். இப்போது மக்களவை தேர்தலில் பஸ்வான் தம்பியையும், பஸ்வான் மகனையும் அரவணைத்து இருக்கிறது பா.ஜ. எப்படி தொகுதி பங்கீடு செய்து அவர்களுக்கு வழங்கப்போகிறது என்பதை பீகார் எதிர்பார்த்து காத்திருக்கிறது. பஸ்வான் கட்சியை மட்டுமல்ல நிதிஷ் கட்சியையும் மோடி விட்டுவைக்கவில்லை.

2014 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிபோது புதிய முதல்வராக நிதிஷ்குமாரால் தேர்வு செய்யப்பட்டவர்தான், அவரது நம்பிக்கைக்குரிய ஜித்தன் ராம் மஞ்சி. 2014 மே 20 முதல் 2015 பிப்22 வரை அவர் மொத்தம் 278 நாட்கள் பீகார் முதல்வராக இருந்தார். அந்த நம்பிக்கைக்குரிய ஜித்தம்ராம் மஞ்சி இன்று நிதிஷ் கட்சியில் இல்லை. அவரை நிதிஷிடம் இருந்து பிரித்து வெளியே கொண்டு வந்து தனிக்கட்சி தொடங்க வைத்து விட்டது பா.ஜ. இன்னும் ஈடி, ஐடி, சிபிஐ மூலம் மிரட்டி வளைக்கப்பட்ட உள்ளூர் தலைவர்கள் ஏராளம்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்