சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், நாளை முதல் சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரையில் 4ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.