திமுக அரசு சாதனைகளை எடுத்துக்கூறும் மக்களுடன் மு.க.ஸ்டாலின் செயலி: பொதுமக்கள் பெரும் வரவேற்பு

சென்னை: திமுக அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளை எடுத்துக்கூறும் வகையில் மக்களுடன் மு.க.ஸ்டாலின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் மக்களுடன் மு.க.ஸ்டாலின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும், தமிழ்நாட்டிற்கான பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட அன்றாட முன்னெடுப்புகள், ஊடகங்களில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை பாராட்டி வரும் செய்திகள், திமுக தலைவரின் சமூக வலைத்தள பதிவுகளையும், சாதனை சொல்லும் காணொலிகளும் உடனுக்குடன் ஒரே தளத்தில் திமுகவினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.

பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் ‘உங்களில் ஒருவன்’ தொடரில், மக்களுடன் ஸ்டாலின் செயலி பயனர்களும் பங்கேற்கும் வகையில் உங்களில் ஒருவன் என்ற பகுதியும் இடம் பெற்றுள்ளது. மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான திட்டங்களில், பொதுமக்கள் தங்களுக்கான திட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் பயனடைவதற்கான வழிமுறைகளும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பம்சம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உங்கள் தொகுதியை தெரிந்துகொள்ளுங்கள் பகுதியும் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் தொடங்கப்பட்ட இந்த செயலி, தற்போது திமுகவினரிடையே தேர்தல் பரப்புரையில் திராவிட மாடல் அரசின் சாதனை சொல்லும் ஒரு ஆயுதமாக உருவாகி வருகிறது. மக்களுடன் மு.க.ஸ்டாலின் செயலியை சிறப்பாக பயன்படுத்தும் பயனாளர்களுக்கு தலைவர் கையொப்பமிட்ட டி-சர்ட்டுகள், திராவிட கொள்கை சொல்லும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படுகிறது.

 

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை