எம்கேபி.நகர் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

பெரம்பூர்: சென்னை எம்கேபி. நகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட எம்கேபி.நகர் காவல் நிலையம், கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் ஆகியோர் இணைந்து இன்று காலை எம்கேபி. நகரில் உள்ள விவேகானந்தா பள்ளி மாணவர்களுடன் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியில், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை பயன்படுத்தினால் உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை சைக்கிளில் ஏந்தியபடி சென்றனர்.

இதில் எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், வியாசர்பாடி போக்குவரத்து எஸ்ஐ மனோகர் கலந்து கொண்டனர். புளியந்தோப்பு சரகத்துக்கு உட்பட்ட ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் ஆகிய காவல் நிலையங்கள் சேர்ந்து போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். குக்ஸ் ரோடு அரசு பள்ளி மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் இணைந்து நடத்திய இதில் 150 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ஆபிரகாம் குரூஸ், சிவகுமார், புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது