தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு?.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!

சென்னை: தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள், மற்ற இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் உடனிருந்தார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக,விசிக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில் சந்தித்து பேசியுள்ளனர். திமுக – வி.சி.க. இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

Related posts

6 போலீசார் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்